சிறு, குறு தொழில் நிறுவன மின் ஆளுமை விருதுக்கு டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதியுள்ள சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவன அதிபர்கள்‌ www.itnanban.in.gov.in என்ற இனைண தள முகவரியில்‌ 31.12.2021 க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இவ்வரிய வாய்ப்பினை தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சமீரன்‌ அழைப்பு விடுத்துள்ளார்‌.



கோவை: குறு-சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்கான தமிழ்நாடு மின்‌ ஆளுமை விருதுகள்‌ பெற விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

தமிழக மின்‌ ஆளுமை முகமையின்‌, தலைமை நிர்வாக அதிகாரி, குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்கான தமிழ்நாடு மின்‌ ஆளுமை விருதுகள்‌ வழங்க இருப்பதைத்‌ தெரிவித்துள்ளார்‌.

அதன்படி சிறந்த மின்‌ ஆளுமை(ICT) தீர்வுகள்‌ மற்றும்‌ பயன்பாடுகளை அங்கீகரித்து மேம்படுத்துதல்‌ மற்றும்‌ சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்‌ ஆகியவற்றை நோக்கமாகக்‌ கொண்ட தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும்‌, விழிப்புணர்வை ஏற்படுத்தவும்‌ இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதானது தொழில்‌ துறை, கல்வித்துறை மற்றும்‌ தமிழக அரசின்‌ கூட்டு முயற்சியுடன்‌ வருடந்தோறும்‌ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக, 2021-22 ஆம்‌ ஆண்டுக்கான விண்ணப்பங்கள்‌ பின்வரும்‌ பிரிவுகளுக்கு வரவேற்கப்படுகின்றது.

1. பல்வேறு துறைகளில்‌ சிறந்த மின்‌ ஆளுமை பயன்பாடு.

2. கைப்பேசி / குடிமக்களை மையப்படுத்திய சேவைகளுக்கான சிறந்த மின்‌ஆளுமை பயன்பாடு.

3. சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான மின்‌ ஆளுமை விருது.

தகுதியுள்ள குறு/சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவன அதிபர்கள்‌ www.itnanban.in.gov.in என்ற இனைண தள முகவரியில்‌ 31.12.2021 க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இவ்வரிய வாய்ப்பினை குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சமீரன்‌ அழைப்பு விடுத்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...