ரயில்வே பாலத்தில் விரிசல்- நாளை 22-ரயில்கள் நிறுத்தம்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

திருவலம் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால், இன்றும், நாளையும் 22-ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாலம் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை: திருவலம் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால், இன்றும், நாளையும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாலம் சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலுார் மாவட்டம், திருவலத்தில் பொன்னையாற்றின் குறுக்கே, 1865ல், ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.

அந்த பாலத்தில் 38, 39வது பில்லர் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று (டிச.,23) மூன்று ரயில்களும், இன்று (24 ம் தேதி) 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

தற்போது ஒருவழி பாதையாக மாற்றி அனைத்து ரயில்களும் மற்றொரு ரயில்வே பாலத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையிலிருந்து பெங்களூரு, திருவனந்தபுரம், கோவை, ஈரோடு மார்க்கத்தில் செல்லும் ரயில்களும், அதே போல அந்த மார்க்கத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் பல மணி நேரம் தாமதமாகச் செல்கின்றன.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:-

1. சென்னை- ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ்

2. ஜோலார்பேட்டை- சென்னை ஏலகிரி எக்ஸ்பிரஸ்

3. சென்னை கடற்கரை- வேலுார் கன்டோன்மண்ட் யூனிட் ரயில்

4. வேலூர் கன்டோன்மண்ட்- சென்னை கடற்கரை யூனிட் ரயில்

5. அரக்கோணம்- ஜோலார்பேட்டை யூனிட் ரயில்

6. ஜோலார்பேட்டை- அரக்கோணம் யூனிட் ரயில்

7. பெங்களூரு- சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ்

8. ரேணிகுண்டா- மைசூர் எக்ஸ்பிரஸ்

9. சென்னை சென்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ்

10. கோவை- சென்னை சென்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்

11. சென்னை- மங்களூர் சூப்பர் பாஸ்ட்

12. சென்னை- திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட்

13. சென்னை- மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

14. ஜோலார்பேட்டை-சென்னை செகண்ட் ஏலகிரி எக்ஸ்பிரஸ்

15. சென்னை- ஜோலார்பேட்டை செகண்ட் ஏலகிரி எக்ஸ்பிரஸ்

16. வேலுார் கன்ட்டோன்மண்ட்- சென்னை கடற்கரை எக்ஸ்பிரஸ்

17. ஜோலார்பேட்டை- அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ்

18. பெங்களூரு- சென்னை சதாப்தி எக்ஸ்பிரஸ்

19. சென்னை- பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ்

20. மைசூர்- ரேணிகுண்டா எக்ஸ்பிரஸ்

21. மைசூர்- சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

22. மங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ்

23. ரேணிகுண்டா- மைசூர் எக்ஸ்பிரஸ்

சில்சார்- கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் கூடூர், ரேணிகுண்டா, பாகாலா வழியாகவும், டாடா நகர்- எர்ணாகுளம் மெயில் ரயில், கூடூர், ரேணிகுண்டா, பாகாலா, காட்பாடி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.

மைசூர்-சென்னை சென்ரல் சூப்பர் பாஸ்ட் காட்பாடி வரை இயக்கப்படுகின்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் காட்பாடியிலிருந்து இயக்கப்படுகின்றது. நாளை 25-ம் தேதி 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...