26-ஆம் தேதி 16-வது மெகா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்

வருகிற 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 16-ஆவது தடுப்பூசி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. கிராமப்புறங்களில் 403-முகாம்களும் மாநகராட்சிகளில் 145-முகாமில் மொத்தம் 548-தடுப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.


கோவை: வருகிற 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 16-ஆவது தடுப்பூசி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 26.11 ஒரு லட்சம் நபர்களுக்கு முதல் தவணையும், 20.19 லட்சம் நபர்களுக்கு இரண்டாவது தவணையும் கோவிட்-19 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 94.2 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 72.3 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க ஏதாவது தடுப்பூசி முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12.9.2021- தொடங்கி இதுவரை 15 மெகா கோவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் 13.65 -லட்சம் பேருக்கு 9 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வருகிற 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 16-ஆவது தடுப்பூசி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 403 முகாம்களும் மாநகராட்சிகளில் 145 முகாமில் மொத்தம் 548 தடுப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இதுவரை தடுப்பு எடுத்துக்கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவே பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்படி முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்திப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...