முகுந்தராயபுரம் - திருவலம் இடையே பாலம் சேதம்: 23 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..!

ரயில்கள்‌ ரத்து செய்யப்பட்டுள்ளதால்‌ கிறிஸ்துமஸ்‌ பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்குச் செல்ல இருந்த பயணிகள்‌ சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்‌.


கோவை: அரக்கோணம் - காட்பாடி மார்க்கத்தில், முகுந்தராயபுரம்-திருவலம் இடையே ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

டிசம்பர் 24ம் தேதி ரத்தாகும் ரயில்கள்:-

சென்னை-ஜோலாா்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை (டிச.24) மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயில்(16089), ஜோலாா்பேட்டை-சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு இயக்கப்படும் ஏலகிரி விரைவு ரயில்(16090), சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்ட்-க்கு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில் (06033), வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை கடற்கரைக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இயக்கப்படும் ரயில்(06034),

அரக்கோணம்-ஜோலாா்பேட்டைக்கு வெள்ளிக்கிழமை மாலை 6.05 க்கு இயக்கப்படும் மெமு ரயில்(16085), ஜோலாா்பேட்டை-அரக்கோணத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 6.55 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில்(16086), கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்(12028), சென்னை-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்(12027), ரேணிகுண்டா-மைசூருக்கு வெள்ளிக்கிழமை மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்(11066) ஆகிய ஒன்பது விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கவும், குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரலில்‌ இருந்து கோவைக்கு இயக்கப்படும்‌ சாதாப்தி விரைவு ரயில்‌, மங்களூருவுக்கு செல்லும்‌ அதிவிரைவு ரயில்‌ மற்றும்‌ திருவனந்தபுரம்‌ செல்லும்‌ அதிவிரைவு ரயிலும்‌ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம்‌ மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை, ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட ரயில்கள்‌ ரத்து செய்யப்படுவதாகவும்‌, ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுக்கட்டணம்‌ திரும்ப வழங்கப்படும்‌ எனவும்‌ தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள்‌ ரத்து செய்யப்பட்டுள்ளதால்‌ கிறிஸ்துமஸ்‌ பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்குச் செல்ல இருந்த பயணிகள்‌ கடும்‌ சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...