இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்யும் வயது வரம்பு உயர்வு - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

எனவே, அனைத்து சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்யும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நலத்துறை மூலம் முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலாவது திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதியரில் குழந்தைகளுக்கு உதவித் தொகையாக ரூபாய் 50 ஆயிரமும், இரண்டாவது திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் சிகிச்சை செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தலா 25,000 வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தாய் தந்தை வயது சான்று, சாதி சான்று, இரண்டு குழந்தை பிறப்பு சான்று, தாயின் அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, குடும்ப அட்டை வருமானச்சான்று, ரூபாய் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இருப்பிடச்சான்று, பாஸ்போர்ட் அளவு குடும்ப புகைப்படம் இரண்டு, பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தைக்கு மூன்று வயது பூர்த்தியாகும் முன் விண்ணப்பம் ஆகிய சான்று இணைக்க வேண்டும்.

இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதியின் ஒன்றான பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதில் உள்ள வயது வரம்பு 35 லிருந்து 40 ஆக உயர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே, அனைத்து சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் சமூக நல பிரிவு அலுவலர், மற்றும் மகளிர் நல அலுவலர்கள் அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...