கோவையில் இலவச ஆடுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்டத்தில், 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வாங்க பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும், தலா 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும்.

தகுதியானவர்களிடம் இருந்து, கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...