கோவை மாநகராட்சி வீடுகளில் சேகாரமாகும்‌ குப்பைகளை மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளாக தரம்‌ பிரித்துத் தர மாநகராட்சி ஆணையர்‌ வேண்டுகோள்..!

கடந்த 10 நாட்களில்‌ மட்டுமே மக்கும்‌ குப்பைகள்‌ சேகரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ வீடுதோறும்‌ சேகாரமாகும்‌ குப்பைகளை மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளாக தரம்‌ பிரித்து பொதுமக்கள்‌ மாநகராட்சியிடம்‌ வழங்க ஆணையாளர்‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவிக்கையில்‌,

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ வீடுதோறும்‌ சேகாரமாகும்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்காத குப்பைகளை தினமும்‌ சேகாரம்‌ செய்யும்‌ பணிகள்‌ தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு 90 டன்னாக இருந்த மக்கும்‌ குப்பையின்‌ அளவு இரண்டு மடங்காக

அதிகரித்துள்ளது.

தற்போது தினமும்‌ சுமார்‌ 175 மெட்ரிக்‌ டன்‌ மக்கும்‌ குப்பைகள்‌ தனியாக பெறப்பட்டு வெள்ளலூர்‌ குப்பை கிடங்கில்‌ உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. குப்பைகளை வீடுதோறும்‌ தரம்‌ பிரித்து வாங்கும்‌ பொழுது, மக்கும்‌ மற்றும்‌ மக்காத குப்பைகளை எளிதாக கொண்டு சென்று செயலாக்கம்‌ செய்ய சிரமம்‌ இல்லாமல்‌ இருக்கும்‌.

ஆகவே, வீட்டில்‌ சேகாரமாகும்‌ குப்பையில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பையாக தரம்‌ பிரித்து கொடுக்க வேண்டப்படுகிறது. மேலும்‌, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்‌ மற்றும்‌ வணிக நிறுவனங்களிலும்‌ கருப்பு கலர்‌ பாலித்தீன்‌ கவர்களை உபயோகிக்காமல்‌, மக்கும்‌, மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில்‌ சேகரித்து மாநகராட்சி வண்டிகளில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

அதேபோல, குப்பைக்‌ கழிவுகளை குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை சுகாதார ஆய்வாளர்கள்‌ மூலம்‌ கண்டறியப்பட்டால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌. மேலும்‌, மக்கும்‌, மக்கா குப்பைகளை தரம்‌ பிரித்து தனித்தனியாக வழங்கப்பட வேண்டும்‌ என கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...