வரும் டிசம்பர் 25ம் தேதி கோவை வழியாக கொல்லம் - திருப்பதி சிறப்பு ரயில் இயக்கம்..!

டிசம்பர் 25ம் தேதி இரவு கொல்லத்தில் இருந்து 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதி சென்றடையும்.


கோவை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து கோவை வழியாக திருப்பதிக்கு வரும் டிசம்பா் 25ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிசம்பா் 25 ஆம் தேதி இரவு கொல்லத்தில் இருந்து 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07506), மறுநாள் மாலை 5.10 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

இந்த ரயில், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கனூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...