கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இவை குறித்த விவரங்களை அறிய கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம்.



கோவை: கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில், செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாவட்ட தர ஆலோசகர் (District quality consultant) தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT co-ordinator), தொகுதி கணக்கு உதவியாளர் (lock account assistant), தொழிலாளர் நடமாடும் மருத்துவ பிரிவு டிரைவர் (labour mobile medical unit driver), தொழிலாளர் மொபைல் மருத்துவ உதவியாளர் மற்றும் துப்புரவாளர் (labour mobile medical attender cum cleaner) போன்ற பணியிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் மாவட்ட நலசங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இவை குறித்த விவரங்களை அறிய கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அறிந்து கொள்ளலாம்.

பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 16:12:2021 அன்று மாலை 5 மணிக்குள் பந்தைய சாலையில் உள்ள துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். தேர்வுகளுக்கான நேர்முக தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...