பாலக்காடு எர்ணாகுளம் பேசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கம்

பாலக்காட்டிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாசஞ்சர் ரயில்கள் வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.


கோவை: பாலக்காட்டிலிருந்து எர்ணாகுளம் செல்லும் பாசஞ்சர் ரயில்கள் வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

பாலக்காடு சந்திப்பு எர்ணாகுளம் சந்திப்பு பாலக்காடு சந்திப்பு ரயில் பாலக்காட்டில் காலை 7.20 மணிக்குப் புறப்பட்டு 11.50 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பைச் சென்றடைகிறது.

இந்த ரயில் மதியம் 2.40 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்குப் பாலக்காடு சந்திப்பை வந்தடைகிறது.

இதுபோல் கொல்லம் செங்கோட்டை, கொல்லம் திருச்சிராப்பள்ளி, திருப்பாபுலியூர் டெமோ, மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ், ரயில்களை இயக்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பாலக்காடு சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கிய பாசஞ்சர் ரயிலின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பேஸஞ்சர் ரயில் பொள்ளாச்சி சந்திப்பு திருச்செந்தூர் பொள்ளாச்சி சந்திப்பு என்ற நிலையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...