கட்டாயம்‌ தடுப்பூசி எடுத்துக்‌ கொள்ள வேண்டும் - கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ வேண்டுகோள்

ஒமைக்ரான்‌ வகை கோவிட்‌ நோய்த்‌ தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தகுதியுடைய நபர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ தடுப்பூசி எடுத்துக்‌ கொள்ள மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வேண்டுகோள்‌ விடுத்துள்ளனர்.


கோவை: ஒமைக்ரான்‌ வகை கோவிட்‌ நோய்த்‌ தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தகுதியுடைய நபர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ தடுப்பூசி எடுத்துக்‌ கொள்ள மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வேண்டுகோள்‌ விடுத்துள்ளனர்.

தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌-19 14-வது மெகா தடுப்பூசி முகாம்‌ 11.12.2021 அன்று காலை 9.00-மணி முதல்‌ மாலை 5.00-மணி வரை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 299-மையங்களில்‌ நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் தெரிவிக்கையில்‌, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 94% மேல்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டுள்ளனர்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 18-வயதிற்கு மேல்‌ 1,15,000-நபர்கள்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாமல்‌ உள்ளனர்‌.

எனவே இந்த 14-வது மெகா கோவிட்‌ முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, மேலும்‌, 2,68,000 நபர்கள்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்‌. (கோவிஷீல்டூ முதல்‌ தவணை செலுத்தி 84 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌ மற்றும்‌ கோவேக்சின்‌ 28-நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌) தடுப்பூசி இரண்டாம்‌ தவணை செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமையாமல்‌ தடுக்கப்படுகிறது. மேலும்‌ 100-சதவீத பாதுகாப்பும்‌ கிடைக்கப்பெறுகிறது.

மேலும்‌, தியேட்ட்கள்‌, மால்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ அதிகமாகக் கூடும்‌ பொது இடங்களில்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம்‌ தவணை செலுத்த நாட்கள்‌ முடிவடையாதவர்கள்‌ மற்றும்‌ இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்‌ மட்டுமே பொது இடங்களில்‌ அனுமதிக்கப்படும் என பொதுச்சுகாதாரத்துறை மூலம்‌ அறிவிப்பு வந்துள்ளது. அதேபோல்‌ ஒமைக்ரான்‌ என்ற ஒரு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்‌ அதிக வீரியமுடையதாகவும்‌ வேகமாகப் பரவும்‌ தன்மையுடையதாகவும்‌ தென்னாப்பிரிக்கா நாட்டில்‌ கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாடுகளிலிருந்து வரும்‌ பயணிகள்‌ விமான நிலையத்தில்‌ RTPCR பரிசோதனை செய்யப்பட்டு தங்களது வீட்டில்‌ 14 நாட்கள்‌ தனிமைப்படுத்திக்‌ கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. பொதுச் சுகாதார இயக்குனரகம்‌ தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில்‌ இறந்தவர்களில்‌ 95-சதவீதம்‌ பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்‌ ஆவர்‌.

எனவே, இந்த வைரஸ்‌ தொற்றிலிருந்து தங்களை முழுவதும்‌ பாதுகாத்துக்கொள்ள முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்களும்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள்‌ அனைவரும்‌ 100- சதவீத பாதுகாப்பைப் பெற முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு” மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...