கோவை மாவட்டத்தில் 1,029 இடங்களில் நாளை 14வது மெகா தடுப்பூசி முகாம்..!

புதிய வகை கொரோனா நோய்த் தொற்று பரவுவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளையும் செலுத்திக் கொள்வது மிக அவசியம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 1,029 இடங்களில் 14வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 12ம் தேதியில் இருந்து மெகா தடுப்பூசி முகாம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்தது. கடந்த வாரத்தில் இருந்து சனிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 14 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஊரகப் பகுதிகளில் 729 மையங்கள், மாநகராட்சியில் 300 மையங்கள் என மொத்தம் 1,029 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 1 லட்சம் தடுப்பூசிகளுக்கு மேல் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது புதிய வகை கொரோனா நோய்த் தொற்று பரவுவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளையும் செலுத்திக்கொள்வது மிக அவசியம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும் சனிக்கிழமை நடைபெறவுள்ள 14வது மெகா தடுப்பூசி முகாமில் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநர் பி.அருணா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...