கோவையில் வரும் 18ம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அழைப்பு...!

இந்த முகாமுக்கு வரும் அனைத்து இளைஞர்களும், சுயவிவரம் மற்றும் கல்வி சான்று நகல்களுடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்க வயது வரம்பு இல்லை.


கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 18 -ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன், சமூக இடைவெளியுடன் வரும், 18ம் தேதி ஈச்சனாரி, ரத்தினம் கல்லூரியில் காலை, 9:00 மணியளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி துறை, ஜவுளி, இன்ஜி., ஐ.டி., கட்டுமானம், ஆட்டோமொபைல்ஸ், விற்பனை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உட்பட 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமுக்கு வரும் அனைத்து இளைஞர்களும், சுயவிபரம் மற்றும் கல்வி சான்று நகல்களுடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்க வயது வரம்பு இல்லை. தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில், விபரங்களை பதிவு செய்ய வேண்டும். கலந்து கொள்ள அனுமதி இலவசம். மேலும், விபரங்களுக்கு, 94990 55938 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...