கோவையில் வரும் 10-ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆன்லைன் மூலம் நடைபெறும்.

கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நிதி ஆப் கே. நீ கட் மூலம் வருகிற 10-ஆம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆன்லைன் மூலமாக நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோவை: கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நிதி ஆப்கே நீகட்

(Nidhi Aapke Nikat) மூலம் வருகிற 10-ஆம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆன்லைன் மூலமாக நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமை தாங்குகிறார். இதில் சந்தாதாரர்கள் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையும், தொழிலதிபர்கள்12 மணி முதல் | மணி வரையும் ஓய்வூதியதாரர்கள் 2.30 முதல் 3.30 மணி வரையும் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள் ஓய்வூதியதாரர்கள் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகள் குறித்த விவரங்களை வருகிற 8-ந் தேதி [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், குறைகள் குறித்த விவரங்களுடன் பெரியார் தொழில் மையம் நிறுவன முகவரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என யூ ஏ என் ஓய்வூதிய நியமன ஆணை எண், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகிய விவரங்களை இடம்பெற வேண்டுமென, மண்டல உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...