கோவையில் ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டம்..!

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளது.


கோவை: கோவையில் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு, 100 சதவீத மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த திட்டப் பயனாளிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் ஐந்து வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதோடு பராமரிக்க பயிற்சியும் அளிக்கப்படும்.

மேலும், தீவன தொகையாக ஆண்டுக்கு 200 ரூபாய் வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...