கோவை மாநகர போலீசில் 14-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்..!

தேர்தல் காலங்களில் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கோவை மாநகரில் பணியாற்றிய, 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகரில் பணியாற்றிய, 14 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் மூன்றாண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்கான பணியிட மாறுதலைச் செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, மேற்கு மண்டல போலீசில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் 33-பேர் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர போலீசில் பணியாற்றும் கந்தசாமி, நிர்மலா, வேளாங்கண்ணி உதயரேகா, ஹேமலதா, சாந்தி, மசூதாபேகம், கவிதா, இ.நிர்மலா, ராஜவேல், கீதா ஆகியோர், கோவை சரகத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

முத்துமணி, திருப்பூர் மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி, பீளமேடு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, செல்வபுரம் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா ஆகியோர், நிர்வாக காரணங்களால் சேலம் சரகத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சரவணன், பழனியம்மாள், கதிர்வேல், தண்டபாணி, பாலமுருகன், சசிகலா, பாண்டியம்மாள், முத்தமிழ் செல்வன், வேலுதேவன், யசோதா தேவி, சாந்தமூர்த்தி, விக்னேஸ்வரன், சரவணன், தமிழ்செல்வி ஆகியோர், பிற மாவட்டங்களிலிருந்து கோவை மாநகர போலீசுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...