கோவையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்.!!

ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2021 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.


கோவை: குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது,

கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுக்குப் பறிமுதல் செய்யப்பட்ட 5-ஆறு சக்கர வாகனங்கள், 17-நான்கு சக்கர வாகனங்கள், 2-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 133-இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 157-வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 08.12.2021 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலூர், மதுக்கரை, க.க.சாவடி, செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலுக்கா, கோமங்கலம், நெகமம் மற்றும் வால்பாறை காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2021 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாகச் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...