கோவையில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்..!!

இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு மனு அளித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை ஆட்சியர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு மனு அளித்து தீர்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...