முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயரில், மாணவர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு, இணை செயல்பாடுகள் நடத்தி, மதிப்பெண் அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவு..!

மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற போட்டிகள் நடத்தி, மதிப்பெண்கள் வழங்கி, பட்டியல் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயரில், மாணவர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு, இணை செயல்பாடுகள் நடத்தி, மதிப்பெண் அளிக்க வேண்டுமென பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காமராஜர் பிறந்தநாளான, ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக, ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் சிறந்த பள்ளிகளுக்கு, விருது அளிக்கப்படுகிறது. இதோடு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தமிழ்வழியில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

மாவட்ட வாரியாக, பத்தாம் வகுப்பில் படிக்கும் 15 மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 படிக்கும், 15 மாணவர்களுக்கு தலா, 20 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். கலை, விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே, இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்.

கடந்தாண்டு பொதுத்தேர்வு நடத்தாததால், பள்ளிகளில் இணை செயல்பாடுகள் நடத்தி, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி, தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற போட்டிகள் நடத்தி, மதிப்பெண்கள் வழங்கி, பட்டியல் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...