இன்னும் தடுப்பூசி போடலையா? கோவையில் 177-மையங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்.!

தமிழக அரசு உத்தரவின்படி கோவை மாநகராட்சி பகுதியில்‌ 177-மையங்களில்‌ கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ 25.11.2021 ௮ன்று காலை 7.00 முதல்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசு உத்தரவின்படி கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 177 மையங்களில்‌ கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ 25.11.2021 ௮ன்று காலை 7.00 முதல்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ 25.11.2021 அன்று காலை 7.00 மணி முதல்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 177 மையங்களில்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (24.11.2021) தகவல்‌ தெரிவித்துள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவிக்கையில்‌, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 94 சதவீதத்திற்கு மேல்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டுள்ளனர்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 18 வயதிற்கு மேல்‌ 1,40,000 நபர்கள்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாமல்‌ உள்ளனர்‌.

எனவே இந்த மெகா கோவிட்‌ முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, மேலும்‌, 2,45,000 நபர்கள்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்‌.

(கோவிஷீல்டு முதல்‌ தவணை செலுத்தி 84 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌ மற்றும்‌ கோவேக்சின்‌ 28 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌) தடுப்பூசி இரண்டாம்‌ தவணை செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமையாமல்‌ தடுக்கப்படுகிறது. மேலும்‌ 100 சதவீத பாதுகாப்பும்‌ கிடைக்கப்பெறுகிறது.

மேலும்‌ தியேட்டர்கள்‌ - மால்கள்‌, மற்றும்‌ மக்கள்‌ அதிகமாகக் கூடும்‌ பொது இடங்களில்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம்‌ தவணை செலுத்த நாட்கள்‌ முடிவடையாதவர்கள்‌ மற்றும்‌ இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்‌ மட்டுமே பொது இடங்களில்‌ அனுமதிக்கப்படுவர் என பொதுச்சுகாதாரத்துறை மூலம்‌ அறிவிப்பு வந்துள்ளது.

எனவே, முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்களும்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள்‌ அனைவரும்‌ 100 சதவீத பாதுகாப்பைப் பெற முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு” மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...