கனமழையால் கோவை வழியாக இயக்கப்படும் 2-ரயில்கள் ரத்து..!

கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ரயில்கள், ரத்து செய்யப்படுவதாகச் சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.


கோவை: கோவையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ரயில்கள், ரத்து செய்யப்படுவதாகச் சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.

புயலால் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தெற்கு மத்திய ரயில்வே பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, இன்று நாகர்கோவிலிலிருந்து புறப்படும் நாகர்கோவில் - பெங்களூரு(வண்டி எண்: 17236) இடையே இயக்கப்படும். ரயில், ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பாட்னாவிலிருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22670) ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக டில்லியிலிருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாகத் திருவனந்தபுரம் செல்லும் கேரள எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...