கோவையில் வருகிற 27-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்- மாவட்ட ஆட்சியர் தகவல்.!!

கோவை மாவட்டத்தில் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில், படித்த இளைஞர்கள் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில், படித்த இளைஞர்கள் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் திட்டச் செயலாக்க அலுவலகம் மகளிர் திட்டம் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை 27-ந் நடத்த உள்ளது.

இதில் முன்னணி தொழில் நிறுவனங்கள் படித்த மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. வேலை வாய்ப்பு முகாம் 27 -ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை நியூ சித்தாபுதூர் பாரதியார் சாலையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களான ஐ.டி, இண்டஸ்ட்ரீஸ், ஆட்டோமொபைல், கார்மென்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனை துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது.

8-வது முதல் தொழில்நுட்பக் கல்வி பட்டயப் படிப்பு இளங்கலை மற்றும் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் தவறாமல் அவர்களுடைய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர பகுதி சான்றுடன் அசல் மற்றும் அவருடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...