கோவையில் நாளை நடக்கும் முகாமில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு..!

ஊரக பகுதிகளில் 838 மையங்கள், மாநகராட்சியில் 260 மையங்கள் என மொத்தமாக 1,098 மையங்களில் மெகா இந்த முகாம் நடைபெறுகிறது.


கோவை: கோவையில் நாளை நடக்கும் முகாமில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நாளை 10வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஊரக பகுதிகளில் 838 மையங்கள், மாநகராட்சியில் 260 மையங்கள் சேர்த்து மொத்தமாக 1,098 மையங்களில் மெகா இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும், 2 ஆம் தவணை தடுப்பூசிக்கு காத்திருப்பவர்களும் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...