கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஜனவரி மாதம் வேலை வாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்ற வேலைவாய்ப்பு கொள்கை குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இந்த தகவலை தெரிவித்தார்.


கோவை: கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கொள்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் தலைமையில் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.

இதில் கல்வி நிறுவனங்கள் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்த 252 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் உரிமைச் சட்டம் 2016 மூலம் அனைத்து நிறுவனங்களுக்கும் சமூக வேலைவாய்ப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது.

இது தொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்கனவே அரசாணை அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், 52 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனை மையத்தின் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...