தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி.!!

தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மார்க்கெட், திரையரங்கம் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என சற்று முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


கோவை: தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மார்க்கெட், திரையரங்கம் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என சற்று முன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்குத் தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9-இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது.

இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டு செல்கின்றனர். இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் உள்ளனர். இதனால் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுச்சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...