மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு..!

கோவை விமான நிலைய விரிவாக்க (நிலஎடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலராக சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வருவாய் அலுவலராக பணிபுரிந்த மீனாட்சி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட வருவாய் அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, சென்னையில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியம் வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிப்காட்- இரண்டில் பணிபுரிந்த ராஜேந்திரன் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை விமான நிலைய விரிவாக்க (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலராக சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வருவாய் அலுவலராக பணிபுரிந்த மீனாட்சி சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) பொறுப்பிற்கு தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலை வருவாய் அலுவலராக பணிபுரிந்த மருத்துவர் செல்வசுரபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...