சேலம் உட்பட தமிழகத்தில் 30-டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக மாற்றம்!

சேலம் உட்பட தமிழகத்தில் பணியாற்றி வந்த 30-டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


சேலம்: சேலம் மாநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 30-டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் உட்பட தமிழகத்தில் பணியாற்றி வந்த 30 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சரவணன், சேலம் மாநகர நுண்ணறிவுப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு பணியாற்றிவந்த உதவி ஆணையர் பூபதிராஜன், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிவந்த உதவி ஆணையர் சின்னசாமி, சேலம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் பொருளாதார குற்றப்பிரிவு நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையர் செல்வராஜ், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தர்மபுரி டவுன் டி.எஸ்.பி.யாக பணியாற்றிவந்த அண்ணாதுரை, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கும், விழுப்புரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிவந்த பழனிசாமி, நாமக்கல் சமூக சீர்திருத்தம் மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன், கிருஷ்ணகிரி டவுனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டி.எஸ்.பி. வினோத், தர்மபுரி டவுனுக்கும், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பார்த்திபன், விழுப்புரம் டவுனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 30 டி.எஸ்.பி., உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...