கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் இடமாற்றம்..!

பொறுப்பில் இருந்த சசிப்ரியாவை ஜவர்கலால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் ஜே.என்.என்.யூ.ஆர்.எம். பிரிவுக்கு மாற்றி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலராக இருந்த சசி பிரியா ஜே.என்.என்.யூ.ஆர், எம் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிர்வாக பொறியாளர் திட்டம் என்கிற பதவிக்கு சசிப்ரிய நியமிக்கப்பட்டார். நகர வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குதல் செயல்படுத்துவது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தாமல் கட்டட வரைபட அனுமதிக்காக கோப்புகளில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார்.

இந்நிலையில், சாய்பாபா காலனி கே.கே. புதூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட்டில் நகரமைப்பு அலுவலர் சசிப்ரிய வீடு கட்டியிருப்பது மற்றும் அவரது சகோதரி வீடு கட்டி வருவதும் ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுதொடர்பான ஆவணங்களை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா ஆய்வு செய்தார். இதற்கிடையே மதுரை மாநகராட்சியில் நிர்வாக பொறியாளர் திட்டம் பணியாற்றிய கருப்பாத்தாளை அரசு இங்கு மாற்றியது.

இந்த நிலையில், அவர் பொறுப்பு ஏற்றதும் நகரமைப்பு அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டது. பொறுப்பில் இருந்த சசிப்ரியாவை ஜவர்கலால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் ஜே.என்.என்.யூ.ஆர்.எம். பிரிவுக்கு மாற்றி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...