கோவை வழியாக தான்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு நாளை முதல் சிறப்பு ரயில் துவக்கம்..!

சத் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்க தான்பூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


கோவை: கோவை வழியாக தான்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் நாளை முதல் தொடங்குகிறது.

சத் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க தான்பூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பிஹார் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பூர்வாஞ்சல் பகுதி மக்கள் சூரிய பகவானை வணங்கும் விரத பூஜையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கங்கை நதிக்கரையில் வழிபாடு செய்து வணங்குவார்கள்.

இதை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தான்பூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு ஒரு வழியில் சிறப்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் வண்டி 5 படுக்கை வசதி, 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 16 தலா இரு இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும், சிறப்பு ரயில் நாளை மதியம் 1.30 மணிக்கு தான்பூரில் இருந்து புறப்பட்டு பாட்னா, மாது பூர், தான்குனி, கட்டாக், புவனேஸ்வர், விஜயவாடா, நெல்லூர், சேலம், திருப்பூர், கோவை வழியாக 16ம் தேதி மாலை 3.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...