மாதாந்திர பராமரிப்பு பணிகள்..! கோவை அரசூர் பகுதியில் வரும் 15ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு..!

அரசூர் பகுதியில் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை அரசூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் 15ம் தேதி மின்சார நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையை அடுத்த அரசூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரசு பொத்தியாம் பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோட கவுண்டன் புதூர், செல்லம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, மோளப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ரஜனி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...