சென்னை உள்பட 7-மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழையின் காரணமாக நாளை (12-ம் தேதி) சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உட்பட 7-மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



சென்னை: கனமழையின் காரணமாக நாளை 12-ம் தேதி சென்னை காஞ்சிபுரம் கடலூர் உட்பட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை பாண்டிச்சேரி கடலூருக்கும் இடையே மையம் கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி புயலாக வலுப்பெற்று மாலை ஹரிகோட்டா சென்னைக்கு இடையே கரையைக் கடந்தது.

அதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்ந்து சென்னையைச் சுற்றி உள்ள மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் உட்பட 7- மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கனமழையின் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது

மேலும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...