கோவை மாவட்டத்தில் ராணுவ தேர்வு 14-ந் தேதி: மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்.!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் தொகுதி 2-கோவை மாவட்டத்தில் 7-தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 2,329-பேர் எழுதுகின்றனர்.


கோவை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் தொகுதி 2-கோவை மாவட்டத்தில் 7-தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை 2,329-பேர் எழுதுகின்றனர்.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம், மற்றும் பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும், வெளி மாநிலம் மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கு பேருந்து வசதிகள் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகள் தேர்வுக் கூடத்திற்கு முற்பகல் நண்பகள் மற்றும் பிற்பகல் ஆகிய நேரங்களில் தேர்வு தொடங்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வளாகத்திற்குள் வந்துவிடவேண்டும்.

தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்பு ஒவ்வொரு முறையும் 10-நிமிடத்திற்கு முன்னதாக வாயிற் கதவு பூட்டப்பட்டு விடுவதால், அதன் பின் வரும் எந்த ஒருவரும் தேர்வு வளாகத்தினுள் வர கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

எனவே தேர்வர்கள் தேர்வு தொடர்பான அறிவுரைகளைப் பெறும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விட வேண்டும் எனவும், தேர்வு வளாகத்துக்குள் மொபைல் போன், டிஜிட்டல் கைக்கடிகாரம், உள்ளிட்ட மின்னியக்க கருவிகள் எதையும் எடுத்து வரவேண்டாம் எனவும் இத்தேர்வுகள் கருப்பு மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், தேர்வர்கள் யு.பி.எஸ்.சி இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டுடன் உள்ள தேவரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒன்று மத்திய-மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் எடுத்து வர தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வு மையங்களில் தேர்வுகள் தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் கை கழுவும், திரவம் மற்றும் முகக் கவசங்கள் இருப்பின் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...