கோவை - பொள்ளாச்சி - பழனி வழித்தடத்தில் 10ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம் - தென்னக ரயில்வே அறிவிப்பு..!

கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே 40 கி.மீ. அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை - பொள்ளாச்சி - பழனி இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே 40 கி.மீ. அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வழித்தடத்தில் கடைசியாக 2020 மார்ச் மாதம் ரயில்கள் இயக்கப்பட்டன.

கடந்த 17 மாதங்களாக ரயில்கள் இயக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில், அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து, ரயில்வே வாரியம் அனுமதி அளித்ததால், கோவையில் இருந்து போத்தனூர், பொள்ளாச்சி வழியாக மீண்டும் ரயில்சேவை தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் 10ம் தேதி முதல் தினமும் மதியம் 2.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06463), மாலை 4.40 மணிக்கு பழநி சென்றடையும். பழநியில் இருந்து வரும் 11-ம் தேதி முதல் காலை 11.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06462) மதியம் 2 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள், போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, புஷ்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பழநியில் இருந்து வரும் 10ம் தேதி முதல் தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடையும்.

மதுரையில் இருந்து வரும் 11ம் தேதி முதல் தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06480) காலை 10.10 மணிக்கு பழநி வந்தடையும். கோவை ரயில்நிலையத்தில் இருந்து வரும் 13-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்:06419) இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும்.

பொள்ளாச்சியில் இருந்து வரும் 14-ம் தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06420) காலை 8.40 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள், போத்தனுார், கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...