தொடர் கனமழை காரணமாக தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு..!

இதர தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மற்றும் நாளை (9ம் தேதி) நடைபெற இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாட தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் செய்து ராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற இருந்தது.

தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மற்றும் 9ம் தேதி (நாளை) நடைபெற இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாட தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்படுகின்றன.

இதர தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான தேதி தேர்வு துறையினரால் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...