கோவை மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

மதுக்கரை வட்டாட்சியர் ஏ.நாகரஜனை தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும், கோவை தெற்கு வட்டாட்சியர் புனிதவதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, மதுக்கரை வட்டாட்சியர் ஏ.நாகரஜனை தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும், கோவை தெற்கு வட்டாட்சியர் புனிதவதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும், அன்னூர் வட்டாட்சியர் எஸ்.இரத்தினம் ஆதி திராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) பிரிவுக்கும், ஆனைமலை வட்டாட்சியர் என்.விஜயகுமாா் பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏ.இசட். பா்சானா, (தனி வட்டாட்சியர், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம்), எஸ்.சரண்யா (தனி வட்டாட்சியர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்), ஏ.வி.சிவகுமாா் (தனி வட்டாட்சியர், ஆதிதிராவிடா் நலத் துறை), வி.தங்கராஜ் (தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம்), எஸ்.சிவகுமாா் (தனி வட்டாட்சியர், நகர நில வரி திட்டம், மேட்டுப்பாளையம்), எஸ்.சதீஷ் (வரேவற்பு அலுவலர், ஆட்சியர் அலுவலகம்), என்.பானுமதி (தனி வட்டாட்சியர், சமூக பாதுகாப்புத் திட்டம், ஆனைமலை), பி.வெங்கடாசலம் (கோட்ட கலால் அலுவலர், பொள்ளாச்சி), ஜி.தணிகைவேல் (சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா், பொள்ளாச்சி) ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...