தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 5ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு..!

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


கோவை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான, வரும் நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் 4-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5-ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் அரசுக்கு வந்தன.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 5-ம் தேதி அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

அதேபோல், வரும் 5-ம் தேதி அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 20-ம்தேதி (மூன்றாம் சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...