கோவை - சென்னை இடையே நாளை முதல் கூடுதல் ரயில் சேவை.!!

கோவை - சென்னை இடையே அக்டோபா் 30-ஆம் தேதி முதல் நிரந்தர ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை - சென்னை இடையே அக்டோபா் 30-ஆம் தேதி முதல் நிரந்தர ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் - கோவை இடையே அக்டோபா் 30-ஆம் தேதி முதல் ‘கோவை ரயில் சேவை‘ என்ற பெயரில் 02675 -மற்றும் 02676-எண்களில் அதிக நிரந்தரப் பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில், ஏ.சி.சோ் காா் 2- பெட்டிகள், இரண்டாம் வகுப்பு சோ் காா் 13- பெட்டிகள், பொது இரண்டாம் வகுப்பு 4- பெட்டிகள், சரக்கேற்றி 1 பெட்டி என மொத்தம் 20-பெட்டிகளுடன் இயக்கப்படும்.

இதேபோல, அக்டோபா் 29 -ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு 02601, 02602-ஆகிய எண்களுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில், ஏ.சி. பெட்டி - 5, ஸ்லீப்பா் கிளாஸ் -10, பொது இரண்டாம் வகுப்பு - 5, சரக்கேற்றி பெட்டிகள் 2 என மொத்தம் 22- பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...