கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் மாற்றம்.!!

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்தானம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்தானம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பாக அரசு அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் கடிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதிலும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் நிலையில், உள்ள 28-அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்தானம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதரம்) பணியிடத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடத்திலிருந்த கோவேந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்ரீனிவாசன், ஈரோடு மாவட்ட பாவனி சாகரில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன உதவி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பொறுப்பிலிருந்த ராணி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பொறுப்பிலிருந்த தேவராஜ் நீலகிரி மாவட்டம் உதவி திட்ட அலுவலர் (கணக்கு மற்றும் நிர்வாகம்) பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுந்தரம், கிருஷ்ணகிரி மாவட்ட உதவி திட்ட அலுவலர் (உட்கட்டமைப்பு) பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராஜ், திருப்பூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அப்பணியிடத்திலிருந்த மணிகண்டன் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...