தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் பெற இன்று கடைசி நாள்..!

இணைய வழியாக கடந்த மாதம் 30ம் தேதிக்குள் இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்த நிலையில், விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை உரிமம் பெற இன்று கடைசி நாளாகும்.

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு உரிமத்தை ஒற்றை சாளர முறையில் பெற்றிட வேண்டும்.

அதன் அடிப்படையில் இணைய வழியாக கடந்த மாதம் 30ம் தேதிக்குள் இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்திருந்தார்.

இதனிடைய, தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே, பட்டாசு உரிமம் பெற இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...