கோவை விமான நிலைய ஓடுதளம் விரிவாக்க நில எடுப்பு, உடைமையாளர்கள் ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க உத்தரவு.!!

உரிய ஆவணங்களான, அசல் நில பத்திர ஆவணம், மூல பத்திர நகல், வில்லங்கச் சான்று, குடிநீர் இணைப்பு ரசீது போன்ற ஆவணங்களின் அசல் அல்லது நகல்களைச் சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.


கோவை: கோயம்புத்தூர் விமான நிலையத்தின் ஓடுதளம் விரிவாக்க நில எடுப்பு, உடைமையாளர்கள் ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையம் ஓடுதள விரிவாக்கப் பணிகளுக்காக 624.51 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பு செய்யப்படவுள்ளதையொட்டி தமிழக அரசால் ரூ.1,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சில நில எடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு பரிசீலனையில் சில நிலங்கள் உள்ளன. பரிசீலனையில் உள்ள நிலங்களின் உடைமையாளர்கள் வரும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 10-மணி முதல் மதியம் 1-மணி வரை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வருவாய் ஆட்சியர் அலுவலகம் அல்லது திட்ட இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களான, அசல் நில பத்திரம் ஆவணம், மூல பத்திர நகல், வில்லங்கச் சான்று, குடிநீர் இணைப்பு ரசீது போன்ற ஆவணங்களின் அசல் அல்லது நகல்களைச் சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...