ரயில்களின் வேகம் அதிகரிப்பு - தெற்கு ரயில்வே

சென்னை: புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட ஜோரி இந்த அட்டவணையை வெளியிட்டார். இந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.இந்த அட்டவணையில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் 20 முதல் 90 நிமிடங்கள் குறையும். ராமேஸ்வரம் கூப்ளி ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் வரும் 9 ரயில்கள் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூரிலிருந்து புறப்படும் 12 ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 42 ரயில்கள் 20 நிமிடங்களிருந்து 90 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டள்ளது.

28 ரயில்கள் 5 நிமிடங்களிருந்து 15 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ரயில் பயண நேரம் குறைவு: வேகம் அதிகரிப்பால் சென்னை எழும்பூர் மானாமதுரை சிலம்பு விரைவு ரயில் பயண நேரம் 90 நிமிடம் குறையும். ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரயிலின் பயண நேரமும் 90 நிமிடங்கள் குறையும். ஹவுரா - குமரி ரயில், குருவாயூர் - சென்னை, தூத்துக்குடி - சென்னை ரயில் நேரம் 55 நிமிடம் குறையும். தஞ்சை - சென்னை உழவன் ரயில், சென்னை - ராமேஸ்வரம் ரயில் பயண நேரம் 55 நிமிடமாக குறைகிறது.

வேகம் அதிகரிப்பால் சென்னை எழும்பூர் - ஜோத்பூர் விரைவு ரயில் பயண நேரம் 55 நிமிடம் குறைகிறது. ஹம்சாபேர், அந்தியோதயா, உதய் விரைவு ரயில் உள்பட 6 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...