கோவையில் வருகிற 6-ம் தேதி ஏலத்தில் விடப்படும் குற்ற வழக்கில் சிக்கிய வாகனங்கள்.!

கோவை: கோவையில் பல்வேறு விதமான காரணங்களினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மேற்கு மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பல்வேறு விதமான காரணங்களினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மேற்கு மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்களை உரிமையாளர்கள் மீண்டும் எடுக்க வராத காரணத்தினால் வருகிற 6-ம் தேதி ஏலம் விட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

வரி கட்டாதது மற்றும் இதர குற்றங்களுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களால் நீண்ட காலமாக எடுக்கப்படாமல் கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன் தொகையாக ரூ.10-ஆயிரத்துக்கான வங்கி வரைவு காசோலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கோவை (மேற்கு) என்ற பெயரில் எடுத்து, கோவையில் செலுத்தத்தக்க வங்கி வரைவோலையினை செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேலை நாள்களில் காலை 10-மணி முதல் நண்பகல் 12-மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனம், டாக்ஸி என மொத்தம் 20-வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன.

மேற்கண்ட வாகனங்கள் கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை அலுவலக வேலை நாள்களில் காலை 11-மணி முதல் மாலை 5-மணி வரை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...