கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத தொழில் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை-கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.!!

கோவை: கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அப்படியிருந்தும் கோவை, வடசித்தூர் பகுதியிலுள்ள ரெம்மி டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இங்கு பணியாற்றிய 465 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு தொழிற்சாலை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல ஆனைமலை அருகில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொண்ட சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, ரூ.19,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பணியாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை பின்பற்றல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது, உடல் வெப்ப நிலை பரிசோதனை ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தினமும் சீரான இடைவெளியில் கிருமி நாசினி தெளித்து தொழிற்சாலைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்பட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

மேற்படி நிறுவனங்களில் அதிகாரிகள் தணிக்கை மேற்கொள்ளும் பொழுது வழிகாட்டி நடைமுறைகளில் குறைகள் கண்டறியப்பட்டால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 விதி 51-60ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...