ஊரடங்கு காலத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ கடனை கட்ட சொன்னால் நடவடிக்கை என கோவை ஆட்சியர் எச்சரிக்கை!

கோவை: முழு ஊரடங்கு காலத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ கடன்‌ தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம்‌ செய்யும்‌ தனியார்‌ வங்கிகள்‌ மற்றும்‌ நுண்நிதி கடன்‌ நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்‌.நாகராஜன்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: முழு ஊரடங்கு காலத்தில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ கடன்‌ தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம்‌ செய்யும்‌ தனியார்‌ வங்கிகள்‌ மற்றும்‌ நுண்நிதி கடன்‌ நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்‌.நாகராஜன்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

“கொரானா பெருந்தொற்று 2ம்‌ அனல பரவலை கட்டுப்படுத்தும்‌ நோக்கில்‌ தமிழகத்தில்‌ கடந்த 10.05.2021 முதல்‌ முழு ஊாங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌ கோயம்பத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள தனியார்‌ வங்கிகள்‌ மற்றும்‌ நுண் நிதி கடன்‌ வழங்கும்‌ நிறுவனங்கள்‌ மகளிர்‌ சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன்‌ தவணைத்‌ தொகையை திரும்ப செலுத்தக்‌ கேட்டு நிர்பந்தம்‌ செய்து வருவதாக பல்வேறு புகார்கள்‌ வருகின்றன.

கொரானா பெருந்தொற்று சூழலில்‌ மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளில்‌ சுணக்கம்‌ ஏற்பட்டு இக்கட்டான காலகட்டத்தில்‌ உள்ளனர்‌. எனவே, அவர்களது கடனுக்கான தவணைத்‌ தொகையை வசூலிக்க நிர்பந்தம்‌ செய்வதை தவிர்த்து கால அவகாசம்‌ வழங்கி கூடுதல்‌ வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்‌.

இது தொடர்பாக மாவட்ட அளவில்‌ திட்ட இயக்குநர்‌, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்‌, உதவித்திட்ட அலுவலர்கள்‌ (மகளிர்‌ திட்டம்‌) மூலம்‌ கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும்‌ மகளிர்‌ சுய உதவிக்குழுக்களின்‌ கடன்‌ திரும்ப செலுத்தும்‌ கால அட்டவணையை மாற்றி அமைக்கவும்‌ நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது.

மேலும்‌, கொரோனா பெருந்தொற்று காலத்தில்‌ தனியார்‌ வங்கிகள்‌ மற்றும்‌ நுண் நிதி நிறுவன பணியாளர்கள்‌ கடன்‌ தொகை வசூல்‌ செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதால் அவர்கள்‌ மூலம்‌ கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக எந்த புகார்களுக்கும்‌ இடம்‌ அளிக்காத வகையில்‌ செயல்படவும்‌, இதையும்‌ மீறி புகார்கள்‌ ஏதேனும்‌ புகார் எழும்பட்சத்தில்‌ ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதப்பட்டு தொடர்புடைய அனைத்து தனியார்‌ வங்கிகள்‌, நுண்‌ நிதி கடன்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ தொடர்புடையவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.”

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...