பராமரிப்பு பணி காரணமாக கோவை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை; பராமரிப்புப் பணி காரணமாக கோவை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


கோவை; பராமரிப்புப் பணி காரணமாக கோவை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “கோவை- போத்தனூர் இடையே ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோவை வழியே இயக்கப்படும் 5 ரயில்கள் வருகிற 15, 17 ஆகிய தேதிகளில் இருகூர்-போத்தனூர் இடையே மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி தன்பாத்-ஆலப்புலா சிறப்பு ரயில், புதுடெல்லி-திருவனந்தபுரம் சிறப்பு ரயில், பெங்களூர்-எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஆலப்புழா- தன்பாத் சிறப்பு ரயில், எர்ணாகுளம்- பெங்களூர் சிறப்பு ரயில் ஆகிய 5 ரயில்கள் கோவை ரயில் நிலையத்துக்கு வராமல் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

இதேபோல வருகிற 15 மற்றும் 17-ம் தேதிகளில் கரூர்-கோவை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், கோவை ரயில் நிலையத்துக்கு வராமல் போத்தனூர் வரை வந்து திரும்பிச் செல்லும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...