கோவை மாநகராட்சியில்‌ வ.உ.சி. உயிரியல்‌ பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள்‌ வரும் மார்ச் 31ம் தேதி வரை செயல்படாது - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சியில்‌ அனைத்து பூங்காக்கள்‌, மாநகராட்சி வ.உ.சி. உயிரியல்‌ பூங்கா, உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌ வரும் மார்ச் 31ம் தேதி வரை செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌, கொரானா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களான அனைத்து மாநகராட்சி பூங்காக்கள்‌, மாநகராட்சி வ.உ.சி. உயிரியல்‌ பூங்கா, மாநகராட்சிக்குச்‌ சொந்தமான உடற்பயிற்சிக்‌ கூடங்கள்‌ ஆகிய அனைத்தும்‌ நாளை முதல்‌ 31.03.2020 வரை செயல்படாது எனவும்‌, மேற்காணும்‌ பொது இடங்களில்‌ பொதுமக்கள்‌ கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...