இணையதளம் பராமரிப்பு காரணமாக ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும் சேவை 2 நாட்கள் ரத்து!

கோவை: இணையதளம் பராமரிப்பு காரணமாக கோவை மின் பகிர்மான வட்டம், வடக்கில் உள்ள வடமதுரை, சீரநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை (29.01.2020) மற்றும் நாளை மறுதினம் (30.01.2020) ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்வாரியம் அலுவலகம் சென்று, வரிசையில் நின்று மின்கட்டணம் செலுத்தும் முறையை மாற்றி, மக்களின் வசதிக்காக ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும் சேவை தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கோவை மின் பகிர்மான வட்டம் வடக்கில் உள்ள வடமதுரை, சீரநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் கோட்டங்களுக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் கட்டண இணையதள சேவையின் தரம் மற்றும் திறன் மேம்படுத்தும் பணி மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 29.01.2020 மதியம் 4.00 மணி முதல் 30.01.2020 காலை 8.00 மணி வரை இணையதள (ஆன்லைன்) மின் கட்டண சேவையை மின் வாரியம் நிறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதள வசதி மேம்படுத்தும் பணிகளால் மேற்கண்ட காலத்தில் ஏற்படும் சேவை இடையூறுகளை பொருட்படுத்தாது மின் நுகர்வோர்கள் தகுந்த ஓத்துழைப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...