தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌ மற்றும் ஒட்டல் தமிழ்நாடு கோயம்புத்தூர்‌ கிளை சார்பில் ஒரு நாள்‌ உள்ளூர்‌ சுற்றுலா அறிமுகம்

கோவை: கோவை மாவட்டத்தில்‌ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌, ஒட்டல் தமிழ்நாடு கோயம்புத்தூர்‌ கிளை மூலமாக ஒரு நாள்‌ உள்ளூர்‌ சுற்றுலா திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில்‌ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌, ஒட்டல் தமிழ்நாடு கோயம்புத்தூர்‌ கிளை மூலமாக ஒரு நாள்‌ உள்ளூர்‌ சுற்றுலா திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கோவையில் இன்று (14.12.2019) முதல்‌ துவங்கப்படும்‌ இத்திட்டம்‌ தொடர்பாக மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌, ஓட்டல்‌ தமிழ்நாடு கோவை கிளையின்‌ மேலாளர்‌ த.உதயசங்கர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாட்டின்‌ சுற்றுலாச்‌ சிறப்புகளைப்‌ பிற மாநிலத்தவரும்‌, அயல்நாட்டவரும்‌ கண்டு களிக்க வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்‌ கழகம்‌ 1968ல்‌ ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகம்‌ துவங்கப்பட்டதிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்‌ வகையில்‌ பல்வேறு சிறப்பு முயற்சிகளைக்‌ கையாள்வதுடன்‌, உள்ளூர்‌ சுற்றுலாத்தலங்களையும்‌

மேம்படுத்தியும்‌ வருகின்றது. அதன்படி, தற்போது சிறப்பு முயற்சியாக கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஒருநாள்‌ பயணத்தினை ஒருங்கிணைத்து நடத்திட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின்‌ மேலாண்‌ இயக்குநர்‌ அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்‌. 

அதன்படி, உள்ளூர்‌ சுற்றுலாவினை அந்தந்த மாவட்ட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின்‌ ஓட்டல்‌ தமிழ்நாடு ஆகியவை இணைந்து நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்‌ இன்று துவங்கப்படும்‌ இச்சுற்றுலா பயணத்தில்‌ ஆழியார்‌ அணை, குரங்கு அருவி, வால்பாறை பாலாஜி கோவில், சோலையாறு அணை, நல்லமுடி, பூஞ்சோலை, கூழாங்கல்‌ ஆறு ஆகிய

இடங்களுக்கு அழைத்துச்சென்று இரவு ஒட்டல்‌ தமிழ்நாடு வளாகத்தில்‌ முடிவடையும்‌ வகையில்‌ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கட்டணமாக ரூ.1155 நிர்ணயிக்கப்பட்டு, சுற்றுலா பயணியர்‌ பதிவு துவங்கப்பட்டுள்ளது. 

அதேபோல, கோவை காந்திபுரத்தில்‌ துவங்கி உதகை பரளிக்காடு பகுதிகளுக்கு ஒருநாள்‌ சுற்றுலா செல்ல 1200 ரூபாயும், கோவை வன அருங்காட்சியகம்‌ அல்லது விவசாய பல்கலைக்கழகம் மருதமலை, கோவை குற்றாலம்‌, ஈஷா யோகா மையம்‌, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர்‌ கோயில்‌ போன்ற பகுதிகளுக்கு ஒரு நாள்‌ சுற்றுலா செல்ல 800 ரூபாயும், மலைவாழ்‌ மக்களின்‌ பாரம்பரிய உணவுடன்‌ பவானி ஆற்று பரிசல் பயணம்‌, சாகச நடைபயணமாக ஒரு நாள்‌ சுற்றுலா செல்ல 450 ரூபாயும்,

நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்லும்‌ அனைத்து பயணியருக்கும்‌, காலை சிற்றுண்டி, தேநீர் / தின்பண்டம்‌, மதிய உணவும்‌ இலவசமாக வழங்கப்படுகின்றது. மேலும்‌, இந்த ஒருநாள்‌ சுற்றுலா தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளவும்‌, கூடுதல்‌ விபரங்களுக்கு 0422-2302176, 2302177, 2303176 மற்றும்‌ 9176999852 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு

கொள்ளலாம்‌. 

இந்த ஒருநாள்‌ சுற்றுலா பயணத்தின்‌ மூலம்‌ சுற்றுலா பயனியர்‌ நம்மை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளின்‌ சிறப்பை அறிய முடிவதுடன்‌. ஒரு நாளை மகிழச்சியுடன்‌ கழிக்கும்‌ பொன்னான வாய்ப்பினையும்‌ தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்‌ வழங்குகின்றது என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌, ஒட்டல்‌ தமிழ்நாடு கோயம்புத்தூர்‌ கிளை மேலாளர்‌ உதயசங்கர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...