தேசிய அளவிலான ஏழாவது பொருளாதாரக்‌ கணக்கெடுப்பு - 2019 - மாவட்ட ஆட்சியர்

நம் நாட்டின்‌ பொருளாதாரத்தில்‌ முறைசாரா தொழில்களான சாலையோரம்‌ மற்றும்‌ வீடுகளில்‌ நடைபெறும்‌ தொழில்களும்‌, முறைசார்ந்த நிறுவனங்களில்‌ நடைபெற்று வரும்‌ தொழில்களும்‌ முக்கிய பங்கு வகிப்பதால்‌ அவைகள்‌ குறித்த கணக்கெடுப்புப்பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டின்‌ பொருளாதாரத்தில்‌ முறைசாரா தொழில்களான சாலையோரம்‌ மற்றும்‌ வீடுகளில்‌ நடைபெறும்‌ தொழில்களும்‌, முறைசார்ந்த நிறுவனங்களில்‌ நடைபெற்று வரும்‌ தொழில்களும்‌ முக்கிய பங்கு வகிப்பதால்‌ அவைகள்‌ குறித்த கணக்கெடுப்புப்பணி நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இக்கணக்கெடுப்பிற்காக கணக்கெடுப்பாளர்கள்‌, மேற்பார்வையாளர்கள்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்கள்‌ எல்லா வீடுகளுக்கும்‌, தொழில்‌ நிறுவனங்களுக்கும்‌ சென்று அங்கு நடைபெறும்‌ தொழில்கள்‌ குறித்த விவரங்களைச்‌ சேகரிக்க உள்ளனர்‌. 1977 முதல்‌ இதுவரை ஆறு முறை இம்மாதிரியான கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. தற்போது 7வது முறையாக ஏழாவது பொருளாதாரக்‌ கணக்கெடுப்பு என்ற பெயரில்‌ நடைபெறவுள்ளது.

இக்கணக்கெடுப்புப்பணி தமிழ்நாட்டில்‌ 09.10.2019 அன்று ஆளுநர்‌ பன்வாரிலால்‌ புரோகித்‌ அவர்களால்‌ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு கோவை மாவட்டத்தில் 24.10.2019 அன்று தொடங்கப்படவுள்ளது. இக்கணக்கெடுப்பிற்காக வீடுகளுக்கும்‌, தொழில் நிறுவனங்களுக்கும்‌ வரும்‌ கணக்கெடுப்பாளர்களுக்கு அவர்கள்‌ கோரும்‌ விவரங்களான குடும்பத்திலுள்ளவர்‌ பெயர்‌, வயது, சமூகப்பிரிவு பாலினம்‌, தொழில்‌ நடந்தால்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளவர்களின்‌ எண்ணிக்கை, பெறப்பட்ட கடன் தொகை, மூலதனம்‌, அந்தாண்டிற்குரிய உற்பத்தி விவரம்‌, வருமானவரி அட்டை எண்‌, ஆதார்‌ அட்டை எண்‌, செல்போன்‌ எண்‌, மின்னஞ்சல்‌ முகவரி ஆகியவற்றை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்‌.

இத்தகவல்களை கையடக்க மடிக்கணினி அல்லது செல்போன்‌ செயலி மூலம்‌ பதிவு செய்வார்கள்‌. இத்தகவல்கள்‌ பதிவு செய்த உடனேயே ஆன்லைனில்‌ மத்திய புள்ளியியல்‌ நிறுவனத்திற்குச்‌ சென்றுவிடும்‌. தகவல்களைப்‌ பதிவு செய்யும்‌ கணக்கெடுப்பாளர்களுக்கு தனி கடவு எண்‌ (70584010) கொடுக்கப்பட்டிருக்கும்‌. எனவே, பொதுமக்கள்‌ தெரிவிக்கும்‌ தகவல்கள்‌ அனைத்தும்‌ இரகசியமாக பேணப்படும்‌. கணக்கெடுப்பாளர்கள்‌ பதிவு செய்யும்‌ தகவல்களை முதல்‌ கட்ட மேற்பார்வையாளர்கள்‌ சரிபார்ப்பார்கள்‌. அதன்‌ பின்னர்‌ அவற்றை இரண்டாம்‌ கட்ட மேற்பார்வையாளர்கள்‌ சரிபார்த்து அரசுக்கு அனுப்பி வைப்பார்கள்‌. இரண்டாம்‌ கட்ட மேற்பார்வையாளர்கள்‌ அனைவரும்‌ அரசு அதிகாரிகள்‌ ஆவார்கள்‌. இக்கணக்கெடுப்புப்‌ பணியினை பொது சேவை மையம்‌ CSC மூலம்‌ நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...