குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்களில்‌ மூத்தக்குடிமக்களை மட்டுமே நிர்வாக குழுவில்‌ உறுப்பினராக சேர்க்க வேண்டும்‌ : மாவட்ட ஆட்சியர்‌

கோவை : கோவை மாவட்டத்தில்‌, மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்களில்‌, பெரும்பான்மையாக மூத்தக்குடிமக்களை மட்டுமே நிர்வாக குழுவில்‌ உறுப்பினராக சேர்க்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில்‌, மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்களில்‌, பெரும்பான்மையாக மூத்தக்குடிமக்களை மட்டுமே நிர்வாக குழுவில்‌ உறுப்பினராக சேர்க்க வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ மூத்த குடிமக்களுக்கென நீண்ட கால ஒப்பந்த அடிப்படையிலும்‌, விற்பனை அடிப்படையிலும்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கி வரும்‌ நிறுவனங்களை முறைப்படுத்த அரசாணை எண் 83 சமூகநலம்‌ மற்றும்‌ சத்துணவுத்‌ திட்டத்துறையின்‌ மூலம்‌ 23.11.2016 அன்று தமிழக அரசால்‌ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையில்‌ பிரிவு iX (i)-ன்படி மூத்தக்குடிமக்கள்‌ தங்கள்‌ செலுத்தும்‌ வைப்பு நிதிக்கு பாதுகாப்பு பெறவும்‌, நிறுவனத்தில்‌ கணக்கு வழக்குகள்‌ வெளிப்படையாக இருக்கும்‌ பொருட்டும்‌ மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்களில்‌,பணம்‌ செலுத்திய பெரும்பான்மையான மூத்த‌ குடிமக்களை மட்டுமே நிர்வாக குழுவில்‌ உறுப்பினராக சேர்க்க வேண்டும்‌.

எனவே, மூத்த குடிமக்களுக்கென விற்பனை மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌, குடியிருப்புகள்‌ கட்டி வழங்கும்‌ நிறுவனங்கள்‌ உடனடியாக அரசாணை எனர்‌:83 -ல்‌ உள்ள பிரிவுiX (i)யை நடைமுறைப்படுத்த வேண்டும்‌. மேலும்‌, இந்த ஆணையிலுள்ள மற்ற பிரிவுகளையும்‌ செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும்‌, மூத்த குடிமக்களுக்கு நீண்ட கால ஒப்பந்தம்‌ மற்றும்‌ விற்பனை அடிப்படையில்‌ குடியிருப்புகள்‌ வழங்கி வரும்‌ மூத்த குடிமக்கள்‌ வளாக நிர்வாகிகள்‌ இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகலாம்‌. என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...